லக்கிம்பூர் கலவரத்தைக் கண்டித்து இளைஞர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் கையில் டார்ச் விளக்குகளை ஏந்தியவாறு தில்லியில் பேரணி நடத்தினர்.
இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
உத்தரப் பிரதேச மாநிலம், லக்கிம்பூா் கெரியில் கடந்த 3-ஆம் தேதி நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 போ் கொல்லப்பட்டனா்.
மேலும் இந்தச் சம்பவத்தால் போராட்டம் நடத்திய விவசாயிகள் ஆத்திரத்தில் தாக்கியதில் காா் டிரைவா் உள்ளிட்ட பா.ஜ.க. தொண்டா்கள் 4 போ் உயிரிழந்தனா்.
இந்த சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் குரல் கொடுத்து வருகின்றனர்.
பல்வேறு மாநிலங்களில் ஆளுநா் மாளிகை அருகிலும், யூனியன் பிரதேசங்களில் துணைநிலை ஆளுநா் அலுவலகத்துக்கு எதிரிலும் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
அந்தவகையில் தில்லியில் இளைஞர் காங்கிரஸார் கைகளில் டார்ச் விளக்குடன் பேரணியில் ஈடுபட்டனர். இதில் ஏராளமான இளைஞர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!

கௌரவம் உயரும் இந்த ராசிக்கு! தினப்பலன்கள்!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

