
மகாராஷ்டிரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணமாக ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் முதல் அக்டோபர் வரையிலான தொடர் கனமழை காரணமாக மகாராஷ்டிரத்தில் 55 லட்சம் ஹெக்டர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தன.
இந்நிலையில், பயிர்கள் சேதமடைந்த விவசாயிகளுக்கு உதவும் வகையில் ரூ.10 ஆயிரம் கோடியை ஒதுக்கியுள்ளதாக மகாராஷ்டிர அரசு அறிவித்துள்ளது.
வெள்ளத்தால் பயிர்கள் நீரில் மூழ்கியதால் நஷ்டமடைந்த விவசாயிகள் நிவாரணத்தொகையினை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
அதன்படி பாசன வசதியற்ற நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பாசன வசதியுடைய நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரமும் வழங்கப்படுகிறது.
தோட்டக்கலை சார்ந்த நிலங்கள் வைத்துள்ள விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணமாக வழங்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.