‘ஆர்.எஸ்.எஸ். உண்மையான மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை’: பகுஜன் சமாஜ் கட்சி

ஆர் எஸ் எஸ் அமைப்பு உண்மையான மக்களின் பிரச்னைகளில் கவனம் செலுத்துவதில்லை என பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திரா பதோரியா தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை சரஸ்வதி தசமி விழாவையொட்டி பேசிய ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பாகவத், நாட்டில் மக்கள்தொகை சமநிலையில் இல்லை எனவும் தேசிய மக்கள்தொகை கொள்கை திருத்தியமைக்கப்பட வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். 

இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்துவரும் நிலையில் இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் சுதீந்திரா பதோரியா,  நாட்டின் முக்கியமான பிரச்னைகளாக பசி, வேலைவாய்ப்பின்மை, மற்றும் வறுமை நிலவி வருகிறது. ஆனால் மோகன் பாகவத்திற்கு நாட்டின் உண்மையான பிரச்னைகளில் கவனம் செலுத்த விருப்பமில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா மேலும் சமத்துவமற்ற ஒன்றாக மாறி வருகிறது எனத் தெரிவித்த பதோரியா மத்திய பாஜக அரசு இதனில் கவனம் செலுத்த வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com