தூத்துக்குடி அருகே பிரபல ரௌடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை

தூத்துக்குடி அருகே பிரபல ரௌடி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 
ரௌடி துரைமுருகன்
ரௌடி துரைமுருகன்

தூத்துக்குடி அருகே பிரபல ரௌடி என்கவுண்டர் செய்யப்பட்ட இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சென்று ஆய்வு செய்தார். 

தூத்துக்குடி அருகே உள்ள கூட்டாம்புளி கிராமத்தைச் சேர்ந்தவர் துரைமுருகன். இவர் மீது தூத்துக்குடி, நெல்லை, மதுரை, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொலை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த ஜெகதீஸ் என்பவரை கொலை செய்து நெல்லையில் புதைத்த வழக்கு தொடர்பாக போலீசார் இவரைத் தேடி வந்து வந்தனர். இந்த நிலையில் முள்ளக்காடு அருகே உள்ள உப்பள பகுதியில் துரைமுருகன், மற்றும் அவரது கூட்டாளிகள் பதுங்கியிருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. 

இதை அடுத்து தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் ராஜபிரபு உள்ளிட்ட போலீசார் இன்று அப்பகுதியை சுற்றி வளைத்து ரௌடி துரைமுருகனை பிடிக்கும்போது துரைமுருகன் உதவி ஆய்வாளர் ராஜபிரபு மற்றும் போலீசார் டேவிட் ஆகியோரை தாக்கியுள்ளார். இதனால் அவர்களிடம் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் வகையில் தன் கையில் பாதுகாப்பு வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியை வைத்து துரைமுருகனை சுட்டுள்ளார். இதில் சம்பவ இடத்தில் துரைமுருகன் பலியானார். மேலும் அவருடன் இருந்த திருச்சியைச் சேர்ந்த ராஜா என்பவரை போலீசார் சுற்றிவளைத்து பிடித்துள்ளனர். 

மேலும் மற்றொருவன் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தூத்துக்குடி கூட்டாபுளியைச் சேர்ந்த துரைமுருகன் மற்றும் அவருடைய ஆதரவாளர்கள் 3 பேருடன் இந்த பகுதியில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல்படி போலீசார் அவரை சுற்றி வளைக்க முயன்றபோது அவர்கள் போலீசாரை தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது தற்பாதுகாப்புக்காக போலீசார் சுட்டதில் துரைமுருகன் சம்பவ இடத்தில் பலியானதாக தெரிவித்தார். 

மேலும் இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக எஸ்.பி ஜெயக்குமார் தெரிவித்தார்.  காயமடைந்த போலீசார் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் என்கவுண்டரில் பலியான ரௌடி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளது.  தூத்துக்குடியில் போலீசார் ரௌடியை என்கவுன்டர் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com