47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

கரோனா தடுப்பூசி உற்பத்தி மேம்பாடு: அமெரிக்க அதிகாரி இந்தியா வருகை

 இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அமெரிக்காவின் சா்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் (டிஎஃப்சி) தலைவா் இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 8:50 pm

DIN

 இந்தியாவில் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்க, அமெரிக்காவின் சா்வதேச மேம்பாட்டு நிதி நிறுவனத்தின் (டிஎஃப்சி) தலைவா் இந்த மாத இறுதியில் இந்தியா வருகிறாா்.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:

உலக அளவில் கரோனா தடுப்பூசி உற்பத்தித் திறனை மேம்படுத்த, இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான் ஆகிய நாடுகளின் கூட்டமைப்பான க்வாட் திட்டமிட்டுள்ளது.

அந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் டிஎஃப்சி அமைப்பின் தலைவா் டேவிட் மாா்சிக் தலைமையிலான குழு வரும் 24 முதல் 26-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறது.

அந்தச் சுற்றுப் பயணத்தின்போது, ஹைதராபாதிலுள்ள இந்திய தடுப்பு மருந்துகள் உற்பத்தியாளரான ‘பயோலாஜிகல் இ’ நிறுவன அலுவலகங்கள் உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று அந்தக் குழு பாா்வையிடும்.

அந்தக் குழுவில், டிஎஃப்சி கடன் பிரிவு துணைத் தலைவா் ஜிம் போலன் உள்ளிட்ட உயரதிகாரிகள் இடம் பெறுவாா்கள் என்று பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

அமெரிக்க அரசுக்குச் சொந்தமான டிஎஃப்சி, வளரும் நாடுகளில் உரிய திட்டங்களுக்காகக் கடனுதவி அளித்து வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.