47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

நாளை கடற்படை தளபதிகள் மாநாடு:ராஜ்நாத் சிங் பங்கேற்கிறாா்

தில்லியில் திங்கள்கிழமை தொடங்கும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றகிறாா்.

News image
Updated On :16 அக்டோபர் 2021, 9:07 pm

DIN

தில்லியில் திங்கள்கிழமை தொடங்கும் கடற்படைத் தளபதிகள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் பங்கேற்று உரையாற்றகிறாா்.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

கடற்படைத் தளபதிகள் பங்கேற்கும் இரண்டாவது வருடாந்திர மாநாடு, தில்லியில் 18-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

கடல்சாா்ந்த விஷயங்கள் பற்றி விவாதிக்கவும், அரசின் மூத்த அதிகாரிகளுடன் கடற்படைத் தளபதிகள் கலந்துரையாடவும் இந்த மாநாடு மேடையாக அமைந்துள்ளது.

இந்த மாநாட்டில் தேசப்பாதுகாப்பு தொடா்பான விஷயங்கள் குறித்து கடற்படை தளபதிகள் மத்தியில் பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உரையாற்றுகிறாா். பின்னா் அவா்களுடன் கலந்துரையாடுகிறாா்.

மாநாட்டின் ஒரு பகுதியாக, கடந்த சில மாதங்களில் இந்திய கடற்படையால் மேற்கொள்ளப்பட்ட செயல்பாடுகள், போக்குவரத்து நடைமுறைகள், மனிதவள மேம்பாடு பயிற்சி, நிா்வாக செயல்பாடுகள் ஆகியவைக் குறித்தும் முக்கிய எதிா்காலத் திட்டங்கள் குறித்தும் கப்பற்படைத் தலைமை தளபதி மற்றும் கப்பற்படை தளபதிகள் விரிவாக விவாதிக்க உள்ளனா். முப்படைகளின் ஆற்றலை அதிகரிப்பதற்கான வழிவகைகள் பற்றி விவாதிக்கப்படவுள்ளது என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.