சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

நாட்டில் புதிதாக 14,146 பேருக்கு கரோனா

இந்தியாவில் புதிதாக 14,146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

News image

கோப்புப்படம்

Updated On :17 அக்டோபர் 2021, 4:14 am

DIN


இந்தியாவில் புதிதாக 14,146 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய மத்திய சுகாதாரத் துறை வெளியிட்ட தரவுகளின்படி, புதிதாக 14,146 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 3,40,67,719 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 19,788 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 144 பேர் பலியாகியுள்ளனர்.

இதுவரை மொத்தம் 3,34,19,749 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,52,124 ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 1,95,846 பேர் இன்னும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணி நேரத்தில் 41,20,772 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதுவரை மொத்தம் 97,65,86,540 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. 

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இதுவரை மொத்தம் 101.7 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் வழங்கப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதில் 10.42 கோடிக்கும் மேலான தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கையிருப்பில் இருப்பதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.