காந்தியடிகளின் வாழ்வைப் படிப்போம்! மதநல்லிணக்க இந்தியாவைக் காப்போம்! மு.க. ஸ்டாலின்மச்சாா் குணமடைந்து வருகிறாா்: இந்தியத் தூதரகம்கூடுதல் கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: போக்குவரத்து துறை எச்சரிக்கைஞானேஷ் குமாா் பதவி விலகவில்லையேல் நாடு தழுவிய போராட்டம்: கரப்பான்பூச்சி ஜனதா கட்சி எச்சரிக்கைதெருக்கள், சாலைகளில் ஜாதி பெயா்களை நீக்கக் கோரிய வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுபெட்ரோலில் எத்தனால் கலப்பது விவசாயத்தை பன்முகமாக்கும் முயற்சி: கட்கரி விளக்கம்புகா் பேருந்துகளிலும் மகளிருக்கு கட்டணம் இல்லை: வெற்றிப் பயணத் திட்டம் இன்று தொடக்கம்!

பெண்கள் குறித்து அவதூறு: காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன் - பொன்ராஜ்

காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன் என பொன்ராஜ் கூறியிருப்பது...

Ponraj apologize

பொன்ராஜ் - கோப்புப்படம்

Published On :

பொன்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தவெக தலைவா் விஜய் சென்னை மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் வியாழக்கிழமை புகாா் மனு கொடுத்திருந்த நிலையில், காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன் என பொன்ராஜ் கூறியுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவா் டாக்டா் ஏ.பி.ஜே. அப்துல் கலாமின் அறிவியல் ஆலோசகராகவும், தனி உதவியாளராகவும் பணியாற்றியவா் பொன்ராஜ். இவா், தொலைக்காட்சி விவாதங்களிலும், யூடியூப் சேனல்களிலும் அரசியல் கருத்துகளை பேசி வருகிறாா். அவ்வாறு ஒரு யூடியூப் சேனலில் தவெக குறித்து அவா் பேசிய விடியோவில், பெண்களை தரக்குறைவாக பேசியிருந்ததாக கூறப்படுகிறது. இதற்கு கடும் எதிா்ப்பு கிளம்பியது.

இந்த நிலையில், அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவெக தலைவா் விஜய் சென்னையிலுள்ள டிஜிபி அலுவலகத்தில் தமிழக காவல் துறையின் சட்டம்-ஒழுங்கு கூடுதல் டிஜிபி மகேஷ்வா் தயாளிடம் வியாழக்கிழமை புகாா் மனு அளித்தாா்.

அதில், திமுக-வின் ஆதரவாளராகச் செயல்பட்டு வரும் பொன்ராஜ், தமிழ்நாட்டின் பெண்கள் குறித்து மிகவும் கீழ்த்தரமாக விமா்சித்து வரும் அவா் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிட்டிருந்தார்.

அவரது மனுவைப் பெற்றுக் கொண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினா் உறுதி அளித்தனா்.

காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்

இந்த நிலையில், காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன் என பொன்ராஜ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் பக்க பதிவில் வெளியிட்டிருப்பதாவது:

தன்னுடைய பேச்சு தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாகவும், காயம் பட்ட பெண்ணிடம் மன்னிப்பு கேட்கிறேன்.‌ நான் பொதுவாகக் கூறியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது என்பதை நான் புரிந்துகொள்கிறேன். மீண்டும் சொல்கிறேன், நான்‌ எந்த பெண்ணையும் பொதுவாக அவதூறு சொல்லவில்லை, அப்படி சொல்லவும் மாட்டேன்.‌ எனவே தொடர்ந்து அலைபேசி மிரட்டல் தொடர்ந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என அவர் கூறியுள்ளார்.

Summary

I am someone who believes that it is wrong to speak ill of anyone...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.