புதுச்சேரியில் மக்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து முன்னாள் முதல்வர் வி. நாராயணசாமி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியின் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது. சில கட்சிகள் கூட்டாக இணைந்தும் சில கட்சிகள் தனியாகவும் போட்டியிட உள்ள நிலையில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
இதுகுறித்து முன்னாள் முதல்வர் வி நாராயணசாமி பேசுகையில், “2016 முதல் 2021 வரை நான் முதலமைச்சராக இருந்தபோது, அப்போதைய துணைநிலை ஆளுநர் டாக்டர் கிரண் பேடியால் பெரும் சிரமத்திற்குள்ளானேன்.
மத்திய அரசு எனக்கு ஒத்துழைப்பு தரவில்லை. அப்படியிருந்தும், மாநிலத்தின் வளர்ச்சி விகிதம் 11.2%-க்கும் அதிகமாக இருந்தது. மத்திய அரசு அனுமதி வழங்காததால், தொழில்துறை வளர்ச்சியைத் தவிர மற்ற அனைத்து நலத்திட்டங்களையும் என்னால் செயல்படுத்த முடிந்தது. மற்றபடி உள்கட்டமைப்பு மேம்பாடு, கல்வி, சுகாதாரம், சுற்றுலா, விவசாயம் என எல்லாத் துறைகளிலும் நாங்கள் மகத்தான சாதனைகளை படைத்தோம்.
தற்போதைய 2021 முதல் 2026 வரையிலான ஆட்சியின் நிலைமை மோசமாக உள்ளது. முதல்வர் ரங்கசாமி தலைமையிலான தற்போதைய என். ஆர். காங்கிரஸ் - பாஜக கூட்டணி அரசு, மாநிலத்தை மிகவும் அபாயகரமான நிலைக்குத் தள்ளியுள்ளது.
சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமான நிலையில் உள்ளது. வேலைவாய்ப்பு இல்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு போதைப்பொருள் பழக்கம் பரவலாக உள்ளது.
அதுமட்டுமின்றி, இந்த அரசில் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. ஒவ்வொரு துறையிலும் ஊழல் உள்ளது. இந்த அரசுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் கவலையில்லை" எனத் தெரிவித்தார்.
Summary
Former Chief Minister V. Narayanasamy has detailed the problems faced by the people of Puducherry.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அண்ணாவுக்குப் பின் விஜய்! முன்னாள் முதல்வரைச் சந்தித்த இந்நாள் முதல்வர்!
முதல்வர் விஜய் பதவியேற்பு விழா!
தலைமைச் செயலகத்தில் முதல்வர் விஜய்! மக்கள் ஆரவாரம்
ஆந்திரத்தின் முன்னாள் முதல்வர் என். பாஸ்கர ராவ் காலமானார்
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

