அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

புதிய கட்சியைத் தொடங்குகிறார் அமரீந்தர் சிங்: ஊடக ஆலோசகர்

பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.

News image
கோப்புப்படம்
Updated On :19 அக்டோபர் 2021, 4:59 pm

DIN


பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் விரைவில் புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாக அவரது ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.

அமரீந்தர் சிங் கருத்தாகப் பதிவிடப்பட்டுள்ள ரவீன் துக்ரல் ட்விட்டர் பதிவுகள்:

"பஞ்சாப் எதிர்காலத்துக்கான போர் தொடங்கிவிட்டது. பஞ்சாப் மக்கள் நலனுக்காகவும் தங்களது வாழ்வாதாரத்துக்காக ஓராண்டுக்கும் மேல் போராடிக் கொண்டிருக்கும் விவசாயிகளுக்காகவும் செயல்பட எனது புதிய கட்சியைத் தொடங்குவது பற்றி விரைவில் அறிவிப்பேன்.

விவசாயிகள் நலனுக்காக அவர்களது போராட்டத்துக்குத் தீர்வு கண்டால் 2022 பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்கப்படலாம்.

பஞ்சாப் மற்றும் பஞ்சாப் மக்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் வரை நான் ஓயமாட்டேன். அரசியல் நிலைத்தன்மையும், உள் மற்றும் வெளியிலிருந்து வரும் அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பதும் தான் பஞ்சாபுக்குத் தேவை. அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்குத் தேவையான அனைத்தையும் செய்வேன் என மக்களுக்கு வாக்குறுதி அளிக்கிறேன்."

முன்னதாக, காங்கிரஸ் மாநிலத் தலைவர் நவ்ஜோத் சிங் சித்துவுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக முதல்வர் பதவியை அமரீந்தர் சிங் ராஜிநாமா செய்தார். இதன்பிறகு, மத்திய உள்துறை அமித் ஷாவை தில்லியில் நேரில் சந்தித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.