தில்லியில் புதிதாக 36 பேருக்கு கரோனா
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
தில்லி கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 58,729 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 36 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்ட விகிதம் 0.06 சதவிகிதமாகப் பதிவாகியுள்ளது.
இதையும் படிக்க | உணவக உரிமையாளர் தற்கொலை: கரோனா கட்டுப்பாடுகள் மீது விமர்சனம்
மேலும் 11 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஒருவர் நோய்த் தொற்றால் உயிரிழந்துள்ளார். அக்டோபர் மாதத்தில் பதிவாகும் மூன்றாவது பலி இது.
இதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 14,39,441 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,14,029 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 25,090 ஆக உயர்ந்துள்ளது.
இன்றைய நிலவரப்படி 322 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...