உணவக உரிமையாளர் தற்கொலை: கரோனா கட்டுப்பாடுகள் மீது விமர்சனம்
கேரள மாநிலம் கோட்டயத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவக உரிமையாளர் சரின் மோகன் என்பவர் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.


கேரள மாநிலம் கோட்டயத்தில் பொருளாதார நெருக்கடி காரணமாக உணவக உரிமையாளர் சரின் மோகன் என்பவர் திங்கள்கிழமை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
வெளிநாட்டிலிருந்து கேரளம் திரும்பிய சரின் மோகன் (42) 6 மாதங்களுக்கு முன்பு குறிச்சி என்ற இடத்தில் விநாயகர் உணவகத்தைத் தொடங்கி நடத்தி வந்துள்ளார். அவருக்கு ராது மோகன் என்ற மனைவியும், கார்த்திகா மற்றும் சித்தார்த் என இரு குழந்தைகளும் உள்ளனர்.
தொழில் வெற்றிகரமாக நகர்வதற்கான அறிகுறிகள் தென்பட்டவுடன் அதே கட்டடத்தில் துணிக் கடை மற்றும் உதிரி பாகங்கள் பிரிவைத் தொடங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளார்.
ஆனால், கரோனா இரண்டாம் அலை பொதுமுடக்கம் அவரது நம்பிக்கையை உடைத்தெறிந்தன. உணவகங்களில் அமர்ந்து உணவருந்த தடை விதிக்கப்பட்டது அவரது வருவாயை பாதித்தது. கட்டட வாடகையாக மாதம் ரூ. 35,000 கட்ட வேண்டிய நிலை இருந்தது.
தொழில் மட்டும் வீட்டுச் செலவுக்காக நகைகளை அடகு வைத்து, கடன் வாங்கி சமாளித்திருக்கிறார். அதிலிருந்து அவரது கடன் மேலும் தீவிரமடைந்ததாக உறவினர்கள் கூறினர். பொது முடக்க அறிவிப்புக்குப் பிந்தைய இந்த நெருக்கடியால் துணிக் கடை மற்றும் உதிரி பாகங்கள் பிரிவை அவரால் தொடங்க முடியவில்லை.
கடன் கொடுத்தவர்கள் மற்றும் தனியார் வங்கிகள் கடனைத் திருப்பக் கேட்டு நிர்பந்தித்தன் காரணமாக ஏற்பட்ட கடுமையான மன அழுத்தமே அவரை இந்த முடிவை எடுக்க வைத்ததாக அவரது உறவினர்கள் தெரிவித்தனர்.
அவரது இரண்டாவது குழந்தைக்கு ஆட்டிசன் பாதிப்பு உள்ளது. சரின் தனது உயிரை மாய்த்துக்கொள்ளும் முன்பு பேஸ்புக் பதிவில், மனைவியின் வங்கிக் கணக்கு தகவல்களைப் பகிர்ந்து குடும்பத்துக்கு உதவுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். திருமண நிகழ்ச்சிகள், மற்ற கடைகள் செல்ல மக்களுக்குத் தடை இல்லாதபோது உணவகங்களில் அமர்ந்து உணவருந்த மட்டும் மக்களுக்குத் தடை விதித்திருப்பதாக சரின் அரசைக் கடுமையாக சாடியுள்ளார்.
கரோனா பொது முடக்கம் தொடங்கிய பிறகு இது முதல் சம்பவம் அல்ல. கடந்த ஆகஸ்டில் இடுக்குயில் உணவக உரிமையாளர் ஒருவர் பொருளாதார நெருக்கடி காரணமாக தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
கேரள உணவக சங்கத்தின் பொதுச்செயலர் ஜி ஜெயபால், "கடந்த ஒரு மாதத்தில் சுமார் 10 உணவக மற்றும் பேக்கரி உரிமையாளர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இதே கரோனா கட்டுப்பாடுகளை அரசு கடைப்பிடிக்கும் என்றால், கரோனா பலி எண்ணிக்கைகளைவிட உணவக உரிமையாளர்கள் தற்கொலைகளை கேரளம் பார்க்க நேரிடும்" என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...