பெட்ரோல் விலை ரூ. 200-ஐத் தொட்டால் பைக்கில் 3 பேர் செல்லலாம்: அசாம் பாஜக தலைவர்

அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால், இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும் என அசாம் பாஜக தலைவர் பாபேஷ் கலிடா தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாபேஷ் கலிடா கடந்த ஜூன் மாதம் பாஜக மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அசாம் ஊடகங்களில் வெளியான தகவலின்படி ஒரு நிகழ்ச்சியில் பெட்ரோல், டீசல் விலை குறித்து அவர் பேசியது:

"அசாமில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 200-ஐத் தொட்டால் இரு சக்கர வாகனங்களில் மூன்று பேர் செல்ல அனுமதிக்கப்படும். எனினும், அரசிடமிருந்து அனுமதி பெற வேண்டும்."

அசாம் மாநில காங்கிரஸ் ஊடகப் பிரிவுத் தலைவர் பாபீடா சர்மா இதுபற்றி கூறுகையில், "பாஜக மாநிலத் தலைவர் எந்தக் காரணத்துக்காக இதைக் கூறியிருந்தாலும், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயர்வால் பொது மக்கள் எதிர்கொள்ளும் கஷ்டங்களின் தீவிரத்தை உணராமல் அவமதிக்கும் வகையில் இருப்பதையே அவரது பேச்சு வெளிக்காட்டுகிறது" என்றார்.  

குவாஹட்டியில் செவ்வாய்க்கிழமை பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 101.80-க்கும், டீசல் விலை ரூ. 94.27-க்கும் விற்பனையாகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com