நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

'தொகுதிக்கு என்ன செய்தாய்?': கேள்வி கேட்டவரை அறைந்த எம்.எல்.ஏ.

பஞ்சாபில் பொதுக்கூட்டம் ஒன்றில் தொகுதிக்கு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பிய இளைஞரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக அறைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

'தொகுதிக்கு என்ன செய்தாய்?': கேள்வி கேட்டவரை அறைந்த எம்.எல்.ஏ.

Updated On :20 அக்டோபர் 2021, 10:27 am

DIN

பஞ்சாபில் பொதுக்கூட்டம் ஒன்றில் தொகுதிக்கு என்ன செய்தாய் என்று கேள்வி எழுப்பிய இளைஞரை காங்கிரஸ் எம்.எல்.ஏ. சரமாரியாக அறைந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பஞ்சாபில் ஏற்கெனவே முதல்வர் விவகாரத்தில் அதிருப்தி ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் மத்தியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. இவ்வாறு நடந்துகொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் பதான்கோட் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜோஜிந்தர் பால் கலந்துகொண்டார். 

பின்னர் தொகுதிக்காக அவர் கொண்டுவந்த திட்டங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் அவர் உரையாற்றும் போது, கூட்டத்தில் இருந்த இளைஞர் ஒருவர் 'தொகுதிக்கு உண்மையாக என்ன செய்தாய்?' என்று கேள்வி எழுப்பினார். 

உடனே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் இளைஞரை கூட்டத்திலிருந்து அப்புறப்படுத்த முயன்றனர். எனினும் இளைஞர் தொடர்ந்து கேள்வி எழுப்பியவாறு எம்.எல்.ஏ.வை நோக்கி முன்னேறினார். 

இதில் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ. பால், இளைஞரைத் தாக்க முயன்றார். இளைஞர் பின்வாங்க முயன்றதும் கைகளை நீட்டி கன்னத்தில் அறைய முயன்றார். இந்த விடியோ இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.