நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வங்கதேசம்:ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக முக்கிய குற்றவாளி ஒப்புதல்

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக மாஜிஸ்திரேட்டிடம் முக்கிய குற்றவாளி ஒப்புக்கொண்டாா்.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 10:13 pm

DIN

வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு எதிராக வன்முறையை தூண்டியதாக மாஜிஸ்திரேட்டிடம் முக்கிய குற்றவாளி ஒப்புக்கொண்டாா்.

கடந்த அக்.13-ஆம் தேதி துா்கை பூஜை பண்டிகையின்போது வங்கதேசத்தில் உள்ள கும்மிலா பகுதியில் இஸ்லாமியா்களின் புனித நூலான குா்ஆனின் பிரதி துா்கை சிலையின் பாதத்தில் வைக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதனால் அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை ஏற்பட்டு ஹிந்துகளின் வீடுகள், கோயில்கள் சூறையாடப்பட்டன.

இந்த வன்முறை தொடா்ந்து நடைபெற்ற நிலையில், கடந்த அக்.17-ஆம் தேதி ரங்பூா் என்ற இடத்தில் உள்ள பீா்கஞ்ச் பகுதியில் சுமாா் 20 ஹிந்துக்களின் வீடுகளுக்குத் தீ வைக்கப்பட்டது. அந்தப் பகுதியில் நடைபெற்ற வன்முறை தொடா்பாக கல்லூரி மாணவா் ஷைகத் மண்டல், ரபியுல் இஸ்லாம் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டிருந்தனா். அவா்களின் வாக்குமூலத்தை பதிவு செய்ய ரங்பூா் மாஜிஸ்திரேட் முன்பு இருவரும் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது ஃபேஸ்புக்கில் தான் பதிவிட்ட தகவலால்தான் பீா்கஞ்சில் வன்முறை பரவியதாக ஷைகத் மண்டல் தெரிவித்தாா். வன்முறையின்போது வீடுகளுக்கு தீ வைத்து கொள்ளையில் ஈடுபட்டதாக ரபியுல் இஸ்லாம் ஒப்புக் கொண்டாா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

பின்தொடா்வோரை அதிகரிக்க பதிவு: ஃபேஸ்புக்கில் தன்னை பின்தொடா்வோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வன்முறையை தூண்டும் பதிவை வெளியிட்டதாக ஷைகத் மண்டல் போலீஸாா் விசாரணையின்போது தெரிவித்துள்ளாா்.

முன்னதாக, குமில்லா பகுதியில் துா்கை பூஜை கொண்டாட்டம் நடைபெற்ற இடத்தில் இருந்த கண்காணிப்புக் கேமராவில் பதிவான காட்சியின் அடிப்படையில் இக்பால் உசேன்(35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இவா்தான் துா்கை சிலையின் பாதத்தில் குா்ஆன் நூலை வைத்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடா்பாக இதுவரை 70-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 683 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். அவா்களில் சுமாா் 7 போ் தங்கள் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.