தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

திரிணமூலில் இணைந்த உ.பி. காங்கிரஸ் தலைவர்கள்

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜேஷ் பதி திரிபாதி மற்றும் லலிதேஷ் பதி திரிபாதி ஆகிய இருவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 

News image
Updated On :25 அக்டோபர் 2021, 12:31 pm

DIN

உத்தரப் பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்கள் ராஜேஷ் பதி திரிபாதி மற்றும் லலிதேஷ் பதி திரிபாதி ஆகிய இருவரும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். 

மேற்குவங்க மாநில முதல்வரும் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜி மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் காங்கிரஸ் தலைவர்கள் இருவரும் திரிணமூலில் இணைந்தனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் சுஷ்மிதா தேவ் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தது குறிப்பிடத்தக்கது. 

உத்தரப்பிரதேசத்தில் அடுத்த ஆண்டில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் காங்கிரஸ் தலைவர்கள் திரிணமூலில் இணைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு சற்று பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.