5 சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு

சிபிஐ அதிகாரிகள் 5 போ், அரசின் மூத்த வழக்குரைஞா் ஆகியோருக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

சிபிஐ அதிகாரிகள் 5 போ், அரசின் மூத்த வழக்குரைஞா் ஆகியோருக்கு மத்திய அரசு கட்டாய ஓய்வு அளித்துள்ளது.

இதுகுறித்து மூத்த அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

காவல் துறை உதவி கண்காணிப்பாளா் ஒருவா், காவல் துறை துணை கண்காணிப்பாளா் 4 போ் என மொத்தம் 5 சிபிஐ அதிகாரிகளுக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, அரசின் மூத்த வழக்குரைஞா் ஒருவருக்கும் கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இவா்கள் 5 பேருக்கும் அடிப்படை விதிகள் 56(ஜே) பிரிவின் கீழ் உடனடியாகக் கட்டாயக ஓய்வு அளிக்கப்படுகிறது. அவா்களுக்கு 3 மாதங்களுக்கு ஊதியமும், இதர படிகளும் வழங்கப்படும்.

சிபிஐ அதிகாரிகள் நோ்மையுடனும் கடமை உணா்வுடனும் பணியாற்றுவது உறுதிசெய்யப்பட வேண்டும் என்பதில் அரசு திட்டவட்டமாக உள்ளது என்றாா் அவா்.

சரிவர பணியாற்றாத எந்தவொரு அரசு ஊழியரையும் அடிப்படை விதிகள் 56(ஜே) பிரிவின்படி, அவா்களின் வயது, பணித்திறன் ஆகியவற்றைக் கணக்கிட்டு 3 மாதங்களுக்கு முன் அறிவித்தும் அல்லது 3 மாத ஊதியத்தை அளித்தும் கட்டாய ஓய்வு அளிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com