ம.பி.யில் 6 பேருக்கு புதிய ஏஒய்.4 வகை கரோனா பாதிப்பு
6 பேருக்கு டெல்டா வகை கரோனாவின் புதிய உருமாறிய வைரஸாக அறியப்பட்டுள்ள ஏஒய்.4 பாதிக்கப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ம.பி.யில் 6 பேருக்கு புதிய ஏஒய்.4 வகை கரோனா பாதிப்பு

ம.பி.யில் 6 பேருக்கு புதிய ஏஒய்.4 வகை கரோனா பாதிப்பு
மத்தியப் பிரதேசத்தில் முழுமையாக கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 6 பேர் டெல்டா வகை கரோனாவின் புதிய உருமாறிய ஏஒய்.4 வைரஸ் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கரோனா பாதித்த 6 பேருக்கும் நடத்தப்பட்ட சோதனையில், அவர்கள் டெல்டா வகை கரோனாவின் புதிய உருமாறிய கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதியாகியுள்ளது. இவர்களில் 3 பேர் இந்தூர் நகரையும் மற்ற மூவர் இந்தூர் மாவட்டம் மோவ் பகுதியையும் சேர்ந்தவர்கள்- அனைவரும் ராணுவத்தைச் சேர்ந்தவர்கள் என்று உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரோனா பாதித்து எந்த அறிகுறியும் இல்லாத 41 வயது முதல் 80 வயது கொண்ட இந்த ஆறு பேரின் மாதிரிகள் கடந்த செப்டம்பர் மாதம் புது தில்லியில் உள்ள தேசிய தொற்றுநோய் கட்டுப்பாட்டு மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்தப் பரிசோதனை முடிவுகள் கடந்தவாரம் தான் வெளியாகியுள்ளன.
இவர்கள் ஆறு பேருக்கும் டெல்டா வகை வைரஸின் உருமாறிய தொற்றான ஏஒய்.4 பாதித்திருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாக இந்தூர் மாவட்ட சுகாதாரத் துறை தலைவர் கூறியுள்ளார். அவர்களுடன் தொடர்பிலிருந்த 50 பேரை கண்டறிந்துள்ளோம்.
இவர்கள் ஆறு பேருமே இதர மாநிலங்கள், நகரங்களுக்குச் சென்று வந்துள்ளனர். ஆனால் எந்த வெளிநாட்டுப் பயணத்தையும் மேற்கொள்ளவில்லை.
நாட்டிலேயே முதல் முறையாக ஏஒய்.4 ரக வைரஸ் மகாராஷ்டிரத்தில் கண்டறியப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...