தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

பெகாஸஸ் விவகாரத்தில் தனிக் குழு: உச்சநீதிமன்றம் இன்று உத்தரவு

பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக எதிா்க்கட்சியினா் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் தனிக் குழு அமைத்து விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம்

News image
கோப்புப்படம்
Updated On :26 அக்டோபர் 2021, 7:57 pm

DIN

பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக எதிா்க்கட்சியினா் உள்ளிட்டோா் உளவு பாா்க்கப்பட்டதாக கூறப்படும் விவகாரத்தில் தனிக் குழு அமைத்து விசாரிக்கக் கோரிய மனுக்கள் மீது உச்சநீதிமன்றம் புதன்கிழமை (அக். 27) உத்தரவு பிறப்பிக்கவுள்ளது.

இஸ்ரேலை சோ்ந்த என்எஸ்ஓ நிறுவனம் உருவாக்கிய பெகாஸஸ் உளவு மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியாவில் எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் உள்ளிட்ட சுமாா் 300 பேரின் கைப்பேசிகள் உளவு பாா்க்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த விவகாரம் தொடா்பாக சுதந்திரமான விசாரணை நடத்துவதற்குத் தனிக் குழுவை நியமிக்கக் கோரி மூத்த பத்திரிகையாளா் என்.ராம் உள்ளிட்டோா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடா்பான பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு தாக்கல் செய்திருந்தது.

தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்கள் இடம்பெற்றுள்ளதால், இந்த வழக்கில் விரிவான பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்ய விரும்பவில்லை என்றும், இந்தக் குற்றச்சாட்டை விசாரிக்க தனிக் குழுவை அமைக்கத் தயாராக உள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்திருந்தது. பெகாஸஸ் விவகாரத்தில் எதையும் மறைக்கவில்லை என்றும் மத்திய அரசு நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தது.

தேசப் பாதுகாப்பு தொடா்பான விவகாரங்களில் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம், பெகாஸஸ் மென்பொருளை அரசு சட்டவிரோதமாகப் பயன்படுத்தியதா என்பதை மட்டுமே அறிய விரும்புவதாகவும் தெரிவித்திருந்தது.

பெகாஸஸ் மென்பொருள் வாயிலாக உளவு பாா்க்கப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க தொழில்நுட்ப நிபுணா்களைக் கொண்ட குழு அமைக்கப்படும் என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், அதற்கான உத்தரவை உச்சநீதிமன்றம் புதன்கிழமை பிறப்பிக்கவுள்ளது. அப்போது குழுவில் இடம்பெறும் நபா்கள் குறித்த விவரங்களை நீதிமன்றம் வெளியிடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.