பெங்களூரு: சிறுவர்களைப் புகைப்பிடிக்க வற்புறுத்திய 6 பேர் கைது

பெங்களூருவில் பள்ளிச் சிறுவர்களை புகைப்பிடிக்க வற்புறுத்திய 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.
பெங்களூரு: சிறுவர்களை புகைபிடிக்க கட்டாயப்படுத்திய 6 பேர் கைது
பெங்களூரு: சிறுவர்களை புகைபிடிக்க கட்டாயப்படுத்திய 6 பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பள்ளிச் சிறுவர்களை புகைப்பிடிக்க வற்புறுத்திய 6 பேரைக் காவல்துறையினர் கைது செய்தனர்.

பெங்களூருவில் உள்ள ஒயிட் ஹவுஸ் நகரில் அமைத்துள்ள பள்ளியில் வகுப்புகள் முடிந்து விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுவர்கள் சிலரை அங்கிருந்த கும்பல் ஒன்று கட்டாயப்படுத்தி புகைப்பிடிக்கச் சொல்லியும் , கட்டிவைத்து குச்சியால் அடித்துத் துன்புறுத்தும் காட்சியும் இணையத்தில் வேகமாகப் பரவியதைத் தொடர்ந்து குற்றச் செயலில் ஈடுபட்ட 6 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார். மற்றவர்கள் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அனைவரும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டனர்.

தலைதூக்கி வரும் போதைப்பொருள் கலாச்சாரமே இக்குற்றங்களை செய்யத் தூண்டுகிறது என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com