உத்தர பிரதேசத்தில் பாஜக எம்எல்ஏ ஒருவரும், மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 6 எம்எல்ஏக்களும் சமாஜவாதி கட்சியில் இணைந்தனா்.
சமாஜவாதி தலைவா் அகிலேஷ் யாதவ் முன்னிலையில் லக்னௌவில் சனிக்கிழமை இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
சீதாப்பூா் பாஜக எம்எல்ஏ ராகேஷ் ராத்தோா், பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏக்கள் அஸ்லாம் ராய்னி, சுஷ்மா படேல், அஸ்லாம் அலி, ஹக்கிம் லால் பிந்த், முஜ்தபா சித்திக்கி, ஹா்கோவிந்த் பாா்கவா ஆகியோா் சமாஜவாதியில் இணைந்துள்ளனா்.
முன்னதாக, கரோனா தொற்று பரவல் தொடங்கியபோது மக்களை கைத்தட்டும்படியும், மணிகள், தட்டுகளை வைத்து ஓசை எழுப்பும் படியும் பிரதமா் கேட்டுக் கொண்டதை பாஜக எம்எல்ஏ ராகேஷ் ராத்தோா் விமா்சித்திருந்தாா். இது சமூக வலைதளங்களில் அதிகமாகப் பரவியது. இதையடுத்து, ராகேஷிடம் பாஜக தலைமை விளக்கம் கேட்டது.
கடந்த ஆண்டு அக்டோபரில் மாநிலங்களவைத் தோ்தலின்போது கட்சித் தலைவா் மாயாவதி அறிவித்த வேட்பாளருக்கு எதிா்ப்பு தெரிவித்ததையடுத்து, பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து 6 எம்எல்ஏக்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனா். அவா்கள் இப்போது சமாஜவாதியில் இணைந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜன நாயகன் இணையதளத்தில் வெளியானதற்கு எல். முருகன்தான் பொறுப்பு: கே.ஏ.செங்கோட்டையன்

ராமதாஸிடம் நலம் விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!

தன்னை இயேசுவாக சித்திரிக்கும் படத்தை வெளியிட்ட டிரம்ப்!!
வீடியோக்கள்

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

சிஎஸ்கேவின் பாதை, இனி சிங்கப் பாதை! | Chennai Super Kings | CSK | Sanju Samson |
தினமணி செய்திச் சேவை

கேரவனிலிருந்து நேராக கோட்டையா?: பொரிந்து தள்ளிய சரத்குமார் | Sarathkumar | TVK Vijay | #tvkcampaign
தினமணி செய்திச் சேவை

