பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

தில்லியில் மீண்டும் அதிகரிக்கும் கரோனா

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 28 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

News image
Updated On :1 செப்டம்பர் 2021, 4:15 pm

DIN

தில்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 36 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நேற்று 28 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சற்று அதிகரித்துள்ளது.

இது தொடர்பாக மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தில்லியில் ஒரு நாளில் மட்டும் புதிதாக 36 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14,37,800-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக உயிரிழப்புகள் ஏதும் ஏற்படாத நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 25,082-ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 42 பேர் குணமடைந்த நிலையில், இதுவரை மொத்தமாக 14,12,375-ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு பல்வேறு மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 343 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.