வாழ்க்கைத் துணை தேவை: இளைஞரின் புதிய முயற்சி

இப்போதெல்லாம் திருமண வயதை எட்டிய இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.
வாழ்க்கைத் துணை தேவை: இளைஞரின் புதிய முயற்சி
வாழ்க்கைத் துணை தேவை: இளைஞரின் புதிய முயற்சி
Published on
Updated on
1 min read


திரிசூர்: இப்போதெல்லாம் திருமண வயதை எட்டிய இளைஞர்களுக்கு பெண் கிடைப்பது குதிரைக்கொம்பாகிவிட்டது.

திருமண தகவல் மையங்களிலும், ஒவ்வொரு ஜாதியினருக்கான சங்கங்களிலும் மணப்பெண், மணமகன் வேண்டி பதிவு செய்திருப்போரின் விகிதத்தைப் பார்த்தாலே கடும் அதிர்ச்சியாகிவிடும். ஆயிரம் இளைஞர்கள் பெண் வேண்டும் என்று ஜாதகம் உள்ளிட்ட விவரங்களை அளித்திருக்கும் நிலையில், ஒரு சில நூறு பெண்களின் தகவல்கள் மட்டுமே அவ்வாறு பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

திருமண தரகர்களுக்கு பணம் கொடுத்தே பல இளைஞர்களின் திருமணக் கனவு காலியாகிவிட்டது. 

இந்த நிலையில் கேரள மாநிலம் திரிசூர் மாவட்டம் வல்லசிரா பகுதியைச் சேர்ந்த 33 வயதாகும் உன்னிகிருஷ்ணன் என்பவர் செய்திருக்கும் புதிய முயற்சிக்கு பல தரப்பிலிருந்தும் ஆதரவு குவிகிறது. அவர் எந்த தரகர்களையும் நாடவில்லை. தனது சிறிய தேநீர் கடையின் முகப்பில் ஒரு அட்டையை தொங்கவிட்டுள்ளார். அதில் வேலைக்கு ஆள்கள் தேவை, கடை வாடகை என்று எழுதப்படவில்லை. மாறாக, வாழ்க்கைத் துணை தேவை. ஜாதி, மதம் கட்டாயமில்லை என்று எழுதிவைத்து, தனது செல்லிடப்பேசியையும் இணைத்துள்ளார்.

இதோடு நின்றுவிடவில்லை, இந்த புகைப்படத்தை அவரது நண்பர்கள் சிலர் தங்களது சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய, உன்னி கிருஷ்ணனுக்கு ஆஸ்திரேலியா, பிரிட்டனிலிருந்து எல்லாம் அழைப்புகள் வருகின்றனவாம்.

வல்லசிரா பகுதியில் சாலையோரம் தேநீர் கடை நடத்தி வருபவர்தான் உன்னிகிருஷ்ணன்.  இது பற்றி அவரே கூறுகிறார், நான் தினக்கூலி தொழிலாளி. எனக்கு தலையில் கட்டி வந்து அதற்காக அறுவை சிகிச்சை மேற்கொண்டு, தற்போது பூரணமாக குணமடைந்துள்ளேன். தற்போது வாழ்க்கையில் திருமணம் செய்ய விரும்புகிறேன். என் வீட்டுக்கு அருகே ஒரு லாட்டரி கடையும், தேனீர் கடையும் நடத்தி வருகிறேன். தரகர்களையோ, திருமண தகவல் மையங்களையே நாட எனக்கு விரும்பவில்லை. எனக்காக எனது நண்பர்களும் அவரது குடும்பத்தினரும் மணப்பெண்ணைத் தேடி வருகிறார்கள். ஆனல் எங்குமே அமையவில்லை. இதனால்தான் இப்படி ஒரு விளம்பரத்தை செய்ய முடிவு செய்தேன் என்கிறார் சிரித்தபடி.

உன்னி கிருஷ்ணன் பற்றி முகநூல் பக்கத்தில் எழுதியிருக்கும் அவரது நண்பர், இந்தப் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மலேசியாவிலிருந்து கூட எனக்கு திருமண விண்ணப்பம் வந்துள்ளது இந்தப் புகைப்படத்தைப் பார்த்து. சிலர் நல்ல வாழ்க்கை அமையும் என்று வாழ்த்தியதாகவும், மதம், ஜாதி தேவையில்லை என்று பதிவு செய்ததற்கு சிலர் பாராட்டுகளையும் கூறினர்.

ஒருவர் சமூக வலைத்தளம் மூலம் பெண் தேடியதற்காக என்னை திட்டவும் செய்தார். தற்போது எனக்கு வரும் அழைப்புகளுக்கு பதில் சொல்லக் கூட நேரமில்லாமல் போய்விட்டது என்று கூறினார் உன்னி.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com