தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

ஆந்திரம் : 5 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சிறை தண்டனை

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சாய் பிரம்மா என்கிற பெண்ணிற்கு நஷ்டஈடு வழங்க மறுத்த 5 ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.

News image

ஆந்திரம் : 5 ஆட்சியர்களுக்கு சிறை தண்டனை

Updated On :3 செப்டம்பர் 2021, 6:26 am

ஆந்திர மாநிலம் நெல்லூரைச் சேர்ந்த சாய் பிரம்மா என்கிற பெண்ணிற்கு நஷ்டஈடு வழங்க மறுத்த 5 ஆட்சியர்களுக்கு உயர்நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்திருக்கிறது.

கடந்த 2017 ஆம் ஆண்டு நெல்லூரில் வசிக்கும் சாய் பிரம்மா என்கிற பெண்மணிக்கு சொந்தமான நிலத்தை அரசு கையகப்படுத்தியது. பின் நஷ்ட ஈடு கேட்டு அப்பெண்மணி உயர்நீதிமன்றத்திற்கு சென்றார். 

வழக்கை விசாரித்த நீதிபதி நெல்லூர் மாவட்ட வருவாயில் இருந்து அப்பெண்ணிற்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என தீர்ப்பளித்தார்.

ஆனால், தற்போது வரை அவருக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கப்படாததால் 2017 ஆம் ஆண்டிலிருந்து நெல்லூர் மாவட்ட ஆட்சியராக இருந்த 5 பேருக்கு சிறைத்தண்டனையுடன், அபராதமும்  வழங்குவதாக நீதிபதி தீர்ப்பளித்திருக்கிறார்.

அதன்படி முன்னாள் ஆட்சியர் மன் மோகன் சிங்குக்கு ஒரு மாதம் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் , எஸ்.எஸ். ராவத்திற்கு  2 மாதம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்தது. மேலும்  சேஷகிரி ராவ், முத்தியால ராஜு மற்றும் இந்தியாஸ் ஆகிய ஆட்சியர்களுக்கு இரண்டு வாரம் சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது.

மேலும், அப்பெண்னின் நஷ்ட ஈடு தொகையை நெல்லூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் அதிகாரிகளின் சம்பளத்தில் இருந்து வழங்கவும் நீதிபதி உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.