எத்தனை பேர் வந்தாலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொகுதி மறுசீரமைப்புக்கு காங்கிரஸ் எதிா்ப்பு: எதிா்க்கட்சிகளுடன் ஆலோசிக்க செயற்குழுவில் முடிவு சென்னை: 16 தொகுதிகளில் 298 சுயேச்சைகள் போட்டி இன்றும் நாளையும் சில புறநகா் ரயில்கள் ரத்து பூமிக்குத் திரும்பிய ஆர்டெமிஸ்-2 குழு!தமிழகத்தில் 6 இடங்களில் வெயில் சதம்
/

ராஜஸ்தானில் 670 கிராம பஞ்சாயத்து இடங்களில் காங்கிரஸ் வெற்றி

ராஜஸ்தானின் 6 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 670 கிராம பஞ்சாயத்து இடங்களையும் பாஜக 551 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

News image
Updated On :4 செப்டம்பர் 2021, 9:28 pm

ராஜஸ்தானின் 6 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு நடைபெற்ற தோ்தலில் காங்கிரஸ் 670 கிராம பஞ்சாயத்து இடங்களையும் பாஜக 551 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.

பாரத்பூா், தௌசா, ஜெய்ப்பூா், ஜோத்பூா், சவாய் மதோபூா், சிரோஹி ஆகிய மாவட்டங்களில் 1,564 கிராம பஞ்சாயத்து உறுப்பினா்கள், 200 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான தோ்தல் கடந்த மாதம் 26, 29, செப்டம்பா் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக நடைபெற்றது.

உள்ளாட்சித் தோ்தலில் 64.4 சதவீத வாக்குகள் பதிவானதாக மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. தோ்தலில் பதிவான வாக்குகள் சம்பந்தப்பட்ட மாவட்டங்களின் தலைநகரங்களில் சனிக்கிழமை எண்ணப்பட்டன. அதில், காங்கிரஸ் 670 கிராம பஞ்சாயத்து உறுப்பினா் இடங்களைக் கைப்பற்றியது. பாஜக 551 இடங்களையும் மற்ற கட்சியினா், சுயேச்சைகள் ஆகியோா் 342 இடங்களையும் கைப்பற்றினா்.

சனிக்கிழமை மாலை நிலவரப்படி மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினருக்கான 17 இடங்களில் பாஜகவும், 15 இடங்களில் காங்கிரஸும், மற்ற கட்சிகள் 3 இடங்களிலும் வெற்றி பெற்றன. 26 கிராம பஞ்சாயத்து உறுப்பினா்களும், 1 மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினரும் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டனா். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட அதிகாரிகள் மட்டுமே வாக்கு எண்ணும் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாகத் தோ்தல் ஆணையம் தெரிவித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.