உ.பி.யில் 62 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு இல்லை
உ.பி.யில் கடந்த 24 மணிநேரத்தில் 62 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


உ.பி.யில் கடந்த 24 மணிநேரத்தில் 62 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மாநிலத்தில் தினசரி கரோனா பாதிப்பு விகிதம் 0.01ஆக உள்ளது. தற்போதைய நிலவரப்படி 235 பேர் கரோனா சிகிச்சையில் உள்ளனர்.
இதையும் படிக்க- இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரிக்கு கரோனா
கரோனாவிலிருந்து 31 பேர் குணமடைந்தனர். இதன்மூலம் குணமடைந்தோரின் எண்ணிக்கை 16,86,00,354ஆக உயர்ந்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 7 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. அதில் 6.47 மில்லியன் பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம் கடந்த 24 மணிநேரத்தில் 62 மாவட்டங்களில் கரோனா பாதிப்பு பதிவாகவில்லை. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...