நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பாராலிம்பிக் பாட்மிண்டன்:  வெள்ளிப் பதக்கம் வென்றார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஹாஸ் யதிராஜ்!

டோக்கியோ பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 பிரிவில் இந்தியாவின் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

News image
Updated On :5 செப்டம்பர் 2021, 5:09 am

DIN

டோக்கியோ பாராலிம்பிக் பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 பிரிவில் இந்தியாவின் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுஹாஸ் யதிராஜ் வெள்ளிப்பதக்கம் வென்றார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்றுவரும் 16 ஆவது பாராலிம்பிக் போட்டிகள் இன்று ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைகிறது. 

இன்று ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற பாட்மிண்டன் விளையாட்டில் ஆடவா் ஒற்றையா் எஸ்எல்4 பிரிவில் இந்தியாவின் ஐ.ஏ.எஸ் அதிகாரி சுகாஸ் யதிராஜ்(38) வெள்ளிப் பதக்கம் வென்றார். 

இறுதிப்போட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸை எதிர்கொண்ட சுஹாஸ் யதிராஜ், 21-15, 21-17, 15-21 என்ற செட் கணக்கில் வீழ்த்தி வெள்ளிப் பதக்கத்தை வென்றார். 

இதையடுத்து 4 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 18 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.  

பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டியில் பதக்கம் வென்ற  உத்தரப்பிரதேசம் மாநிலம், கவுதம் புத்த நகர் மாவட்ட ஆட்சியர் சுஹாஸ் யதிராஜூக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. 

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்தியநாத் உள்ளிட்டோர் வாழ்த்துகள் தெரிவித்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.