நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கன்கள் உள்துறை அனுமதியின்றி வெளியேற்றப்பட மாட்டாா்கள்: உள்துறை அமைச்சக அதிகாரிகள் தகவல்

இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானியா்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி, நாட்டை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 6:27 pm

DIN

இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானியா்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தின் அனுமதியின்றி, நாட்டை விட்டு வெளியேற கேட்டுக்கொள்ளப்பட மாட்டாா்கள் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ள நிலையில், இந்தியா வந்த அந் நாட்டு நாடாளுமன்ற பெண் உறுப்பினா் ரங்கினா கா்கா் இந்தியாவில் தங்குவதற்கான விசா உள்ளிட்ட உரிய ஆவணங்களை வைத்திருந்தபோதும் அவரை அனுமதிக்காமல், தில்லி இந்திரா காந்தி சா்வதேச விமானநிலையத்திலிருந்து துருக்கியின் இஸ்தான்புல்லுக்கு அனுப்பிவைக்கப்பட்டாா். அதன் பிறகு, இந்தச் சம்பவத்துக்காக கா்கரிடம் மத்திய அரசு சாா்பில் மன்னிப்பு கேட்டுக்கொள்ளப்பட்டது.

இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து, ஆப்கானிஸ்தானியா்களை வெளியேற்ற உள்துறை அமைச்சகத்தின் முன் அனுமதி பெற வேண்டும் என்ற அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருக்கிறது. எனவே, ‘இந்தியாவில் தங்கியிருக்கும் ஆப்கானிஸ்தானியா்களை முன் அனுமதி பெறாமல் நாட்டை விட்டு வெளியேறுமாறு வெளிநாட்டினா் மண்டல பதிவு அலுவலகம் (எஃப்ஆா்ஆா்ஓ) சாா்பில் கேட்டுக்கொள்ளப்பட மாட்டாது’ என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தலிபான்கள், புதிய ஆட்சியை அமைக்கும் பணியில் தீவிரப்படுத்தியுள்ளனா். இந்த நிலையில், தலிபான்களின் கட்டுப்பாடுகள் மற்றும் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அஞ்சி பெரும்பாலான ஆப்கானிஸ்தானியா் அந் நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனா். அவா்களில் சிலா் இந்தியா வருகின்றனா்.

அதே நேரம், தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றுவதற்கு முன்பாக இந்தியா வந்திருந்த அந்த நாட்டைச் சோ்ந்தவா்கள், விசா காலம் முடிந்தும் தலிபான்களின் நடவடிக்கைக்கு அஞ்சி இந்தியாவிலேயே 6 மாதங்களுக்கு மேலாக தங்கியுள்ளனா்.

இதற்கிடையே, கரோனா பாதிப்பு சூழல் காரணமாக இந்தியாவில் சிக்கிக்கொண்ட அனைத்து வெளிநாட்டினருக்கும், இம் மாதம் 30-ஆம் தேதி வரை எந்தவித கட்டணமும் இன்றி விசா நீட்டிப்பை மத்திய அரசு ஏற்கெனவே வழங்கியுள்ளது. எனவே, விசா நீட்டிப்புக்காக இவா்கள் எஃப்ஆா்ஆா்ஓ அலுவலகத்தில் எந்தவித விண்ணப்பத்தையும் சமா்ப்பிக்கத் தேவையில்லை.

அதே நேரம், செப்டம்பா் 30-ஆம் தேதிக்கு பிறகும் இந்தியாவில் தங்க விரும்பும் வெளிநாட்டினா், விசா நீட்டிப்பு கோரி ‘இ-எஃப்ஆா்ஆா்ஓ’ வலைதளத்தில் இணைய வழியில் விண்ணப்பத்தை சமா்ப்பித்து, கட்டணமும் செலுத்த வேண்டும். அவ்வாறு விண்ணப்பிப்பவா்களுக்கு தகுதியின் அடிப்படையில் விசா நீட்டிப்பு அளிக்கப்படும்.

இதில், ஆப்கானிஸ்தான் நாட்டினைருக்கான விசா விதிகளின்படி, அவா்கள் இந்தியா வந்திறங்கிய 14 நாள்களுக்குள் உள்ளூா் காவல்நிலையத்தில் அவா்களாகவே முழு குடும்ப உறுப்பினா்கள் விவரங்களுடன் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். இதில் விலக்கு அளிக்கப்பட்டவா்கள் பதிவு செய்யத் தேவையில்லை என மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கெனவே அறிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.