டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஆப்கன் விவகாரம்: உயர்நிலைக் குழுவுடன் மோடி ஆலோசனை

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

News image
கோப்புப்படம்
Updated On :6 செப்டம்பர் 2021, 11:23 am

DIN

ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் குழு ஆலோசனை நடத்தி வருகிறது.

ஆப்கனிலிருந்து அமெரிக்கப் படைகள் பின் வாங்கியதையடுத்து ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றினர். இதையடுத்து இந்திய உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை சிறப்பு விமானங்கள் மூலம் மீட்டனர்.

இந்நிலையில் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் குழுவினர் ஆலோசனை நடத்தி வருகின்றனர். இந்தக் கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர். 

மேலும் ஆப்கனின் தற்போதைய சூழல், தலிபான்கள் மூலம் மீண்டும் காஷ்மீரில் அத்துமீறல் நடைபெறுமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.