சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

இந்தியாவில் இன்று மேலும் 38,948 பேருக்கு கரோனா; 219 பேர் பலி

இந்தியாவில் இன்று மேலும் 38,948 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  

News image
Updated On :6 செப்டம்பர் 2021, 4:06 am

DIN

இந்தியாவில் இன்று மேலும் 38,948 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 38,948 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3.30 கோடியாக உயர்ந்துள்ளது. 
இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 219 போ் கரோனாவால் உயிரிழந்துவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 4,40,752 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து இன்று 43,903 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 3,21,81,995 போ் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். 

கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 4,04,874 ஆக உள்ளது. இதுவரை 68.75 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 14,10,649 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. 
இதுவரை மொத்தம் 53,14,68,867 கரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.