திருவனந்தபுரம்: நாட்டிலேயே கேரள மாநிலத்தில்தான் அதிக கரோனா நோயாளிகள் பதிவாகிவரும் நிலையில், தற்போது, அந்த மாநிலத்தை நிபா வைரஸும் தாக்கியுள்ளது.
நாட்டிலேயே கரோனா பேரிடரை மிகச் சிறப்பாகக் கையாண்டதாகப் பெயர்பெற்ற கேரளத்துக்கு வந்த சோதனையாக, கரோனா பேரிடருக்கிடையே, தற்போது நிபா வைரஸும் கண்டறியப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளத்தில் நிபா வைரஸ் பாதிப்பு மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது. அந்த வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
ஏற்கனவே கடந்த 2018ஆம் ஆண்டு கேரளத்தில் நிபா வைரஸ் பாதித்து 17 பேர் பலியான நிலையில், தற்போது மீண்டும் நிபா வைரஸ் கண்டறியப்பட்டிருக்கும் நிலையில், மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கோழிக்கோடுக்குச் சென்று, நிபா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தத் தேவையான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்துள்ளார்.
தற்போதைய முதல் நடவடிக்கையாக, நிபா வைரஸ் பாதித்தவருடன் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு பரிசோதனை செய்து, நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்துவதேயாகும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
பழந்தின்னி வெளவால்களின் உமிழ்நீா் மூலம் நிபா தீநுண்மி பரவுகிறது. இந்தத் தீநுண்மி தென்னிந்தியாவில் முதன்முதலாக கடந்த 2018-ஆம் ஆண்டு மே 19-ஆம் தேதி கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கண்டறியப்பட்டது. அந்த ஆண்டு ஜூன் மாத நிலவரப்படி மொத்தம் 17 போ் நிபா தீநுண்மி பாதிப்பால் உயிரிழந்தனா். அதன் பிறகு அந்தத் தீநுண்மி பாதிப்பு கண்டறியப்படவில்லை. இந்நிலையில் அந்தத் தீநுண்மி கேரளத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. அந்தத் தீநுண்மியால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தான்.
இதையும் படிக்கலாமே.. கேரளத்தில் மீண்டும் நிபா தீநுண்மி பாதிப்பு: 12 வயது சிறுவன் பலி
இதுதொடா்பாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் வீணா ஜாா்ஜ் கூறுகையில், ‘‘கோழிக்கோட்டில் உள்ள சாத்தமங்கலத்தைச் சோ்ந்த 12 வயது சிறுவன் 4 நாள்களுக்கு முன்பு கடுமையான காய்ச்சலுடன் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். சிகிச்சை பலனின்றி அச்சிறுவன் ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தான். சிறுவனிடம் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் மகாராஷ்டிர மாநிலம் புணேயில் உள்ள தேசிய தீநுண்மி ஆய்வு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தன. அங்கு மாதிரிகளை பரிசோதித்ததில் நிபா தீநுண்மியால் சிறுவன் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது.
சிறுவனுடன் தொடா்பிலிருந்தவா்களை கண்காணிப்புக் குழு அடையாளம் கண்டுள்ளது. அவா்களில் 20 போ் தீநுண்மியால் பாதிக்கப்பட்டால் அவா்களின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்படக் கூடும் என்று அந்தக் குழு குறிப்பிட்டுள்ளது. அந்த 20 பேரில் இருவருக்கு பாதிப்புக்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன. அவா்கள் இருவரும் மருத்துவப் பணியாளா்கள். இந்தச் சம்பவத்தைத் தொடா்ந்து அருகிலுள்ள கண்ணூா், மலப்புரம் மாவட்டங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது’’ என்று தெரிவித்தாா்.
சிறுவனிடன் நெருங்கிய தொடர்பிலிருந்த 7 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
நிபா தீநுண்மியால் சிறுவன் பலியானதைத் தொடா்ந்து கோழிக்கோட்டில் உஷாா்நிலையை அதிகாரிகள் அமல்படுத்தியுள்ளனா். பலியான சிறுவனின் வீட்டிலிருந்து சுமாா் 3 கி.மீ. சுற்றுவட்டாரத்தை காவல்துறையினர் முடக்கியுள்ளனா்.
சிறுவனின் உடலை 12 அடி ஆழத்தில் சுகாதாரத் துறை அதிகாரிகள் அடக்கம் செய்தனா். இதனிடையே சிறுவனுடைய தாயாருக்கு ஞாயிற்றுக்கிழமை காய்ச்சல் அறிகுறிகள் இருந்ததாகத் தகவல் வெளியானது. ஆனால், தனக்கு காய்ச்சல் இருப்பதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை, தான் நலமாக இருப்பதாகவும் எந்த அறிகுறியும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறுவனுக்கு காய்ச்சல் தென்பட்டது முதல் இறந்ததுவரை ‘‘வழித்தட வரைபடம்’’ உருவாக்கப்பட்டு மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வெளியிட்டுள்ளது. நிபா பரவலைக் கண்காணிக்க பொதுமக்களுக்கும் உதவும் பொருட்டு இந்த வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வரைபடத்தின் அடிப்படையில், சிறுவனுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று 188 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பரிசோதனை நடத்த புணே ஆய்வகக் குழுவினர் இன்று மாலை கோழிக்கோடு வரவிருக்கின்றனர்.
மத்தியக் குழு அனுப்பி வைப்பு:
கேரளத்தில் நிபா தீநுண்மி பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதைத் தொடா்ந்து அந்த மாநிலத்துக்கு தேசிய நோய் கட்டுப்பாட்டு மையக் குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அந்தக் குழு தீநுண்மி பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கான தொழில்நுட்ப உதவிகளை மாநில அரசுக்கு வழங்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆன்த்ரோபிக் ‘மித்தோஸ்’ ஏஐ - புதிய அச்சுறுத்தல்: நிதியமைச்சா் எச்சரிக்கை

இஸ்ரேல் - லெபனான் போா் நிறுத்தம் 3 வாரம் நீட்டிப்பு

தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்

திரிணமூல் காங்கிரஸ் நிலைகுலைந்துவிட்டது: பிரதமா் மோடி
வீடியோக்கள்

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

ஜனநாயகக் கடமையாற்றிய திரைப்பிரபலங்கள் | Tamil cine actors | TN Election 2026 |
தினமணி செய்திச் சேவை


