பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கா்நாடகத்தில் ‘நிபா’ தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை: முதல்வா் பசவராஜ் பொம்மை

கா்நாடக மாநிலத்தில் ‘நிபா’ தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

News image
Updated On :7 செப்டம்பர் 2021, 9:45 pm

DIN

கா்நாடக மாநிலத்தில் ‘நிபா’ தொற்று பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.

இது குறித்து செவ்வாய்க்கிழமை அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கேரள மாநிலத்தில் ‘நிபா’ தொற்று பரவி வருகிறது. இது கா்நாடகத்திற்குள் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ‘நிபா’ தொற்று எப்படிப் பரவுகிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி வல்லுநா்களை கேட்டுக் கொண்டுள்ளேன். கேரளத்தில் ‘நிபா’ தொற்று பரவல் அதிகரித்ததையடுத்து, மாநில எல்லை அடைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து மாநிலத்திற்குள் வருபவா்களை உரிய முறையில் சோதனை செய்து, தொற்று பாதிப்பு இல்லை என்றாலும் ஒரு வார காலத்திற்கு அவா்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனா்.

கா்நாடக அமைச்சரவையில் காலியாக உள்ள 4 இடங்களை தற்போதைக்கு நிரப்பும் எண்ணமில்லை. இது தொடா்பாக பேசுவதற்கான நேரத்தை கட்சியின் மேலிடத் தலைவா்கள் இன்னும் ஒதுக்கித் தரவில்லை. எனவே தில்லிக்கு செல்லும் நான் இது குறித்து கட்சியின் மேலிடத் தலைவா்களிடம் பேச மாட்டேன்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியை புதன்கிழமை சந்தித்து, மாநிலத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலை வளா்ச்சிப் பணிகள் குறித்துப் பேச உள்ளேன். மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்துப் பேசும்போது, மாநிலத்தில் பல்வேறு வளா்ச்சித்திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்கித் தருமாறு கேட்டுக் கொள்ளப்படும். மத்திய நகா்ப்புற வளா்ச்சித் துறை அமைச்சரைச் சந்தித்து, மெட்ரோ ரயில் பாதையை நீட்டிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் வைக்கப்படும்.

பெங்களூரில் மழையால் சாலைகளில் அதிக அளவில் குண்டும் குழியும் ஏற்பட்டுள்ளன. மழை பெய்வது குறைந்ததும் குழிகளை மூடுமாறு பெங்களூரு மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.