ஆந்திரத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் தீ விபத்து: 10 பேர் படுகாயம்
ஆந்திர மாநிலம் கடப்பாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.


ஆந்திர மாநிலம் கடப்பாவில் விநாயகர் சிலை ஊர்வலத்தில் பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமடைந்தனர்.
ஆந்திர மாநிலம் கடப்பாவில் விநாயகர் சிலை ஒன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. பெனகலூரில் இருந்து சந்துப்பள்ளி கிராமத்திற்கு இளைஞர்கள் எடுத்துச் சென்றபோது பட்டாசு வெடித்துள்ளனர்.
அப்போது ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். 'நேற்று இரவு 10.30 மணியளவில், வாகனத்தின் மீது வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் தற்செயலாக தீப்பிடித்தது. இதில் 5 குழந்தைகள் உட்பட 10 பேர் படுகாயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் ராஜம்பேட்டை அரசு மருத்துவமனை மற்றும் கடப்பா அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது' என்று பெங்களுரு காவல் நிலைய துணை ஆய்வாளர் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...