பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு: பஞ்சாப் அரசு அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

News image

தடுப்பூசி செலுத்தாத ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு

Updated On :10 செப்டம்பர் 2021, 10:48 am

பஞ்சாப் மாநிலத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தாத அரசு ஊழியர்களுக்கு கட்டாய விடுப்பு அளிக்கப்படும் என அம்மாநில அரசு வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் ஒரே ஆயுதமாக தடுப்பூசி இருந்து வருகிறது. இந்நிலையில், தடுப்பூசி செலுத்துவது குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை மத்திய, மாநில அரசுகள் வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பஞ்சாப் அரசு இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

முதல் தவணை கரோனா தடுப்பூசிகூட செலுத்திக் கொள்ளாத பஞ்சாப் மாநில அரசு ஊழியர்களுக்கு செப்டம்பர் 15ஆம் தேதி முதல் கட்டாய விடுப்பு அளிக்கப்படும். மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு இது பொருந்தாது எனத் அறிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.