மகா. அரசு ஹிந்து விரோத அரசு: மத்திய அமைச்சர் விமர்சனம்
மகாராஷ்டிர அரசு ஹிந்து விரோத அரசு என மத்திய அமைச்சர் நாராயண் ராணே குற்றம்சாட்டியுள்ளார்.

கோப்புப்படம்

கோப்புப்படம்
மகாராஷ்டிர அரசு ஹிந்து விரோத அரசு என மத்திய அமைச்சர் நாராயண் ராணே குற்றம்சாட்டியுள்ளார்.
இதுபற்றி அமைச்சர் ராணே மேலும் கூறியது:
"மகாராஷ்டிர அரசு பண்டிகை காலங்களில் கட்டுப்பாடுகளை விதிப்பது தவறு. இது ஹிந்து விரோத அரசு. ஹிந்து பண்டிகைகளின்போது மட்டும்தான் அவர்கள் கட்டுப்பாடுகள் குறித்து சிந்திக்கின்றனர். சிவசேனை ஹிந்துத்வா குறித்து பேசுகிறது. ஆனால், பாஜகவிடமிருந்து விலகியதிலிருந்தே அவர்களது ஹிந்துத்வா முடிவுக்கு வந்துவிட்டது."
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு மகாராஷ்டிரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
முன்னதாக, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரேவை விமர்சித்துப் பேசியதற்காக மத்திய அமைச்சர் நாராயண் ராணே நாசிக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...