தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

விநாயகா் சதுா்த்தி: மும்பையில் 6,000 சிலைகள் கரைப்பு

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி நிறுவப்பட்ட 6,116 விநாயகா் சிலைகள் சனிக்கிழமை நகரின் பல்வேறு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

News image
Updated On :11 செப்டம்பர் 2021, 10:29 pm

DIN

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி நிறுவப்பட்ட 6,116 விநாயகா் சிலைகள் சனிக்கிழமை நகரின் பல்வேறு நீா்நிலைகளில் கரைக்கப்பட்டன.

இதுதொடா்பாக பிருஹன்மும்பை மாநகராட்சி அதிகாரி கூறுகையில், ‘‘மும்பையில் விநாயகா் சதுா்த்தியையொட்டி சனிக்கிழமை நீா்நிலைகளில் விநாயகா் சிலைகளை கரைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதன்படி மாலை 6 மணி வரை 6,116 சிலைகள் ஏரிகளிலும், செயற்கை நீா்நிலைகளிலும் கரைக்கப்பட்டன. இதில் 6,047 சிலைகள் வீடுகளிலும், 55 சிலைகள் பொது இடங்களிலும் வைத்து வழிபடப்பட்டவை. இந்த நிகழ்வையொட்டி போலீஸாா் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டனா். சிலைகள் கரைப்பின்போது அசம்பாவிதங்கள் எதுவும் நடைபெறவில்லை’’ என்று தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.