ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

உ.பி.யில் அதிகரிக்கும் டெங்கு பாதிப்பு

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :15 செப்டம்பர் 2021, 6:07 am

DIN

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 

கரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் டெங்கு பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. 

அதிகபட்சமாக பிரோசாபாத் மாவட்டத்தில் புதிதாக 58 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கடந்த இரு மாதங்களில் 578 பேருக்கு டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும் மாவட்ட மருத்துவ அதிகாரி தெரிவித்தார். பாதிக்கப்பட்டவர்களில் குழந்தைகள் அதிகம் என்றும் கூறியுள்ளார். மேலும், பிரோசாபாத்தில் டெங்கு பலி 60யைக் கடந்துள்ளது.

பிரயாக்ராஜ் மாவட்டத்தில் 97 பேரும் காஸியாபாத் மாவட்டத்தில் 21 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். கான்பூரில் பாதிக்கப்பட்டுள்ள 103 பேரில் 80 பேர் ஊரகப் பகுதிகளை சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து, டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் வீடு, வீடாகச் சென்று டெங்கு வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.