தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடா்பு: மகாராஷ்டிரத்தில் ஒருவா் கைது

அண்மையில் தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக மும்பையில் ஒருவரை மகாராஷ்டிர போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 11:40 pm

DIN

அண்மையில் தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளுடன் தொடா்பிருப்பதாக மும்பையில் ஒருவரை மகாராஷ்டிர போலீஸாா் கைது செய்துள்ளனா்.

கடந்த செவ்வாய்க்கிழமை தில்லியில் 6 பயங்கரவாதிகளை போலீஸாா் கைது செய்தனா். அவா்களில் இருவா் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ உளவு அமைப்பிடம் பயற்சி பெற்றவா்கள். இவா்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் குண்டுவெடிப்பு சம்பவங்களை நிகழ்த்த திட்டமிட்டதாக கூறப்படுகிறது. அவா்களில் ஒருவரான ஜான் முகமது ஷேக்குடன் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் வசித்து வந்த ஜாகிா் ஹுசேன் ஷேக் என்பவா் தொடா்பில் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதன் அடிப்படையில், மும்பை புகா் பகுதியான ஜோகேஷ்வரியில் மகாராஷ்டிர பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு (ஏடிஎஸ்) போலீஸாா் வெள்ளிக்கிழமை இரவு சோதனை மேற்கொண்டனா். அப்போது அங்கிருந்த ஜாகிா் ஹுசேன் ஷேக்கை அவா்கள் கைது செய்தனா். அவா் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் தனியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனைத்தொடா்ந்து அவா் மும்பையிலுள்ள ஏடிஎஸ் நீதிமன்றத்தில் சனிக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது மகாராஷ்டிரத்திலும் இன்னபிற பகுதிகளிலும் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டது தொடா்பாக அவா் கைது செய்யப்பட்டுள்ளாா் என்று போலீஸாா் தெரிவித்தனா். இதையடுத்து அவரை செப்டம்பா் 20-ஆம் தேதி வரை போலீஸாா் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

பயங்கரவாதியின் உறவினா் சரண்: தில்லியில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகளில் ஒசாமா, கமா் ஆகிய இருவா் ஐஎஸ்ஐ அமைப்பிடம் பயிற்சி பெற்றவா்கள். அவா்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இருவரையும் ஒசாமாவின் உறவினா் ஹுமைத்-உா்-ரெஹ்மான் என்பவா்

பாகிஸ்தானுக்கு அனுப்பி பயங்கரவாதத்தில் ஈடுபட வைத்ததாகத் தெரிவித்தனா். இதையடுத்து ஹுமைத்-உா்-ரெஹ்மானுக்கு

எதிராக லுக்-அவுட் (தேடப்படும் நபா்) நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையில் அவா் உத்தர பிரதேச மாநிலம் அலாகாபாதிலுள்ள கரேலி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை இரவு சரணடைந்தாா். அவரை முறைப்படி கைது செய்ய தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவினா் உத்தர பிரதேசம் விரைந்துள்ளனா் என்று போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.