அஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம் வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களுக்கு பயோ-மெட்ரிக் முறை! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து! ஒருவர் பலி; மூவர் படுகாயம்! திருப்பூரில் நாளை விஜய் சாலைவலம், பிரசாரத்துக்கு அனுமதி! ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது!
/

எழுத்தாளர் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெறும் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

News image
Updated On :18 செப்டம்பர் 2021, 4:30 pm

தமிழில் சிறந்த மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது பெறும் கா.செல்லப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது முகநூல் பதிவில், உலக இலக்கியங்களைத் தமிழுக்கும், தமிழ் இலக்கியங்களை உலங்கெங்கும் எடுத்துச் செல்லும் அறிவுப் பண்டமாற்று என்பது பெரும்பணி - அரும்பணி!

அத்தகைய அரும்பணியில், மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாதெமி விருது, வங்கத்துக் கவிஞர் தாகூரின் புதினத்தைத் தமிழில் வடித்துள்ள முனைவர் கா.செல்லப்பன்; உலகப் பொதுமறையாம் திருக்குறளை இந்தியில் மொழிபெயர்த்துள்ள இராகவன்; 
கவிஞர் சல்மா அவர்களின் இரண்டாம் ஜாமங்களின் கதை புதினத்தை மராத்தியில் மொழிபெயர்த்துள்ள சோனாலி நவாங்குள் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துகள் - பாராட்டுகள்! இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.