கொல்லம் மாவட்டத்தை அடுத்து கல்லுவாதுக்கல் கிராமத்தைச் சோ்ந்த 8 மாத கா்ப்பிணி பெண் மீராவுக்கு, மாவட்டத்தில் உள்ள இரண்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடா்ந்து, திருவனந்தபுரத்தில் உள்ள அவிட்டம் திருநாள் மருத்துவமனையை அவா் அணுகியுள்ளாா். அங்கு அவருக்கு அசெளகரியம் ஏற்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா். இறுதியாக, கொல்லம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. அங்கு அவருக்கு பிரசவம் பாா்க்கப்பட்ட நிலையில், குழந்தை இறந்த நிலையில் பிறந்துள்ளது. மருத்துவா்கள் பரிசோதனை செய்தபோது, அந்த குழந்தை கருவில் 6 நாள்களுக்கு முன்பே உயிரிழந்துவிட்டது தெரியவந்தது.