பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!மணிப்பூரில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி, பலர் காயம்பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி எம்.பி.க்கள்! தமிழ்நாடு தேர்தல்! கிராமங்கள் சமநிலை செய்த நகரங்கள் எப்படியிருக்கின்றன மக்கள் வாக்களித்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்? ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?ஈரானை கடிதம் மூலம் ஆளும் மோஜ்தபா! எங்கே, எப்படி இருக்கிறார்?தேர்தல் அரசியல் வரலாற்றில் சிகரமான வாக்குப்பதிவு: விஜய்முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்புகொடைக்கானல் செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
/

ஜம்மு-காஷ்மீரில் விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

News image

விபத்தில் சிக்கிய ராணுவ ஹெலிகாப்டர்

Updated On :21 செப்டம்பர் 2021, 7:47 am

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்ட நிலையில் செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

பாட்னிடாப் என்ற பகுதியில் இந்திய ராணுவத்திற்கு சொந்தமான ஹெலிகாப்டர் இன்று காலை பறந்து கொண்டிருந்தது. அப்போது ஹெலிகாப்டரில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாரால் அவசரமாக தரையிறக்க விமானிகள் முயற்சித்துள்ளனர்.

ஆனால், மலைப் பகுதியில் தரையிறக்கியதால் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதிலிருந்த இரண்டு விமானிகளையும் காயங்களுடன் மீட்ட அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.