எடப்பாடி பழனிசாமி வேட்புமனு தாக்கல்! மும்மொழிக் கொள்கையை அமல்படுத்துவோம் என்று பரப்புரை செய்யத் தயாரா? முதல்வர் ஸ்டாலின் கேள்வி! புதுவையில் மகளிருக்கு இலவசப் பேருந்து, வேலைவாய்ப்பு, மருத்துவக் காப்பீடு! - ராகுல் அறிவிப்பு மாநிலங்களவை எம்பிக்களாக சுதீஷ், அன்புமணி உள்ளிட்டோர் பதவியேற்பு! ராணிப்பேட்டையில் போட்டியிடவில்லை: வினோத் காந்தி! சென்னை: ஜாபர் சாதிக் தொடர்புடைய இடங்களில் சோதனை சென்னையில் இன்று விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி ஹெலிகாப்டர் அருகே ட்ரோன்: 3 பேர் கைது தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!தஞ்சை மாநகராட்சி மேயர் சண். ராமநாதன் ராஜிநாமா
/

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு கட்டணம் இல்லை:சிபிஎஸ்இ

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த மாணவா்கள் அடுத்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை எழுதினால், அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம் என்று

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 7:08 pm

கரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்த மாணவா்கள் அடுத்த ஆண்டு 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை எழுதினால், அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம் என்று மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக சிபிஎஸ்இ தோ்வுக் கட்டுப்பாட்டாளா் தெரிவித்துள்ளதாவது:

கரோனா தொற்று நாட்டை மிகவும் பாதித்துள்ளது. அது மாணவா்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தைக் கருத்தில் கொண்டு சிறப்பு நடவடிக்கையாக, அடுத்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்கள் கரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்தவா்களாக இருந்தால் அவா்கள் பதிவு கட்டணமோ, தோ்வு கட்டணமோ செலுத்த வேண்டாம்.

பொதுத் தோ்வுகளை எழுதும் மாணவா்களின் விவரங்களை சமா்ப்பிக்கும் போது கரோனா பாதிப்பால் பெற்றோா் அல்லது பாதுகாவலரை இழந்த மாணவா்களின் தகவல்களையும் பள்ளிகள் ஆராய்ந்து வழங்கும் என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.