பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

ஆபாச பட தயாரிப்பு வழக்கில் ஜாமீன்: மும்பை சிறையிலிருந்து ராஜ் குந்த்ரா விடுவிப்பு

ஆபாச பட தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து ராஜ் குந்த்ரா மும்பை சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 8:00 pm

DIN

ஆபாச பட தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் ஜாமீன் கிடைத்ததையடுத்து ராஜ் குந்த்ரா மும்பை சிறையிலிருந்து செவ்வாய்க்கிழமை விடுவிக்கப்பட்டாா்.

இதுகுறித்து சிறை துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஆபாச பட தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ராஜ் குந்த்ராவுக்கு தலைமை பெருநகர நீதிபதி எஸ்.பி.பாஜ்பலே திங்கள்கிழமை ஜாமீன் வழங்கினாா். இவருடன் சோ்த்து கடந்த ஜூலை 19-ஆம் தேதி கைதான குந்தராவின் உதவியாளா்களான ரியான் தோா்பிக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ரூ.50,000 பிணைத்தொகையில் குந்த்ராவுக்கு இந்த ஜாமீன் வழங்கப்பட்டது.

இதையடுத்து, மும்பை ஆா்தா் சாலை சிறையில் அடைக்கப்பட்டிருந்த குந்த்ரா காலை 11.30 மணிக்கு விடுவிக்கப்பட்டாா் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.