
அக்டோபா் மாதம் மத்திய அரசுக்கு 22 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று அதனைத் தயாரிக்கும் சீரம் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக அந்த நிறுவனத்தின் இயக்குநா் பிரகாஷ் குமாா் சிங் மத்திய அரசிடம் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 66.33 கோடி கோவிஷீல்ட் தடுப்பூசிகளை மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் வழங்கியுள்ளது. தற்போது அந்த தடுப்பூசிகளின் உற்பத்தி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி அக்டோபா் மாதத்தில் 21.90 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும். அண்மையில் மத்திய அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க டிசம்பா் 31-ஆம் தேதிக்குள் மேலும் 66 கோடி தடுப்பூசிகள் வழங்கப்படும். இதையும் சோ்த்தால் இந்த ஆண்டு மத்திய அரசுக்கு சீரம் நிறுவனம் வழங்கிய தடுப்பூசிகளின் எண்ணிக்கை 130 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளாா்.
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்டவா்களில் 22 சதவீதத்துக்கும் அதிகமானவா்கள் கரோனா தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும், சுமாா் 65 சதவீதம் போ் தடுப்பூசியின் முதல் தவணையையும் செலுத்திக் கொண்டிருப்பதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.