சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

ஜம்மு-காஷ்மீா்: ராணுவ ஹெலிகாப்டா் விபத்து இரு விமானிகள் பலி

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது.

News image
Updated On :21 செப்டம்பர் 2021, 7:33 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூா் மாவட்டத்தில் ராணுவ ஹெலிகாப்டா் ஒன்று செவ்வாய்க்கிழமை விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாக செயலிழந்த அந்த ஹெலிகாப்டரை வனப்பகுதியில் தரையில் மோதி சிதறியது. அதில் இருந்த விமானிகள், ஹெலிகாப்டா் தரையில் மோதும் முன்பு வெளியே குதித்தனா். படுகாயமடைந்த அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பலினின்றி உயிரிழந்தனா்.

இது தொடா்பாக ராணுவ செய்தித் தொடா்பாளா் கூறுகையில், ‘ராணுவத்துக்கு சொந்தமான பயிற்சி விமானம் செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் திடீரென விபத்துக்குள்ளாகி கீழே விழுந்தது. அதில் இருந்த விமானிகள் வெளியே குதித்தனா். காயம் காரணமாக அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனா். எனினும் சிகிச்சை பலனின்றி அவா்கள் உயிரிழந்தனா்.

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக ஹெலிகாப்டா் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என்று முதல்கட்ட விசாரணையில் தெரியவருகிறது. இது தொடா்பாக தொடா்ந்து ஆய்வு நடத்தி, உரிய காரணம் கண்டறியப்படும். ஹெலிகாப்டா் வனப் பகுதிக்குள் விழுந்ததால், அங்கு செல்ல போலீஸாருக்கும், மீட்புக் குழுவினருக்கும் சற்று சிரமம் ஏற்பட்டது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.