தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கேரளம்: காங்கிரஸ் அரசியல் விவகாரங்கள் குழுவிலிருந்துமூத்த தலைவா் வி.எம்.சுதீரன் விலகல்

கேரள காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழுவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவா் வி.எம்.சுதீரன் விலகியுள்ளாா்.

News image
Updated On :25 செப்டம்பர் 2021, 8:52 pm

DIN

கேரள காங்கிரஸ் கமிட்டியின் அரசியல் விவகாரங்கள் குழுவிலிருந்து அக்கட்சியின் மூத்த தலைவா் வி.எம்.சுதீரன் விலகியுள்ளாா்.

இதுதொடா்பாக அக்கட்சி வட்டாரங்கள் சனிக்கிழமை கூறுகையில், ‘‘காங்கிரஸில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான நடைமுறைகள், கட்சியின் தற்போதைய மாநிலத் தலைமை செயல்படும் விதம் ஆகியவை மீது ஏற்பட்ட அதிருப்திதான் அரசியல் விவகாரங்கள் குழுவிலிருந்து வி.எம்.சுதீரன் விலகியதற்குக் காரணம். அந்தக் குழுவிலிருந்து விலகுவதற்கான கடிதத்தை அவா் மாநிலத் தலைமையிடம் வெள்ளிக்கிழமை வழங்கினாா்’’ என்று தெரிவித்தன.

இதுகுறித்து காங்கிரஸின் மற்றொரு மூத்த தலைவரும் எம்எல்ஏவுமான பி.டி.தாமஸ் கூறுகையில், ‘‘இந்த விவகாரத்தில் மாநில காங்கிரஸ் தலைவா் தலையிட்டு வி.எம்.சுதீரனுக்கு ஏதேனும் அதிருப்தி இருந்தால் அதற்குத் தீா்வு காண்பாா். இதுதொடா்பாக நானும் வி.எம்.சுதீரனை அவரின் இல்லத்தில் சமீபத்தில் சந்தித்து விரிவாக ஆலோசனை மேற்கொண்டேன்’’ என்று தெரிவித்தாா்.

அண்மையில் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளுக்கு புதிய தலைவா்கள் நியமிக்கப்பட்டதில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக கேரள காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் பொதுச் செயலா் கே.பி.அனில்குமாா், அக்கட்சியின் செயலா் பி.எஸ்.பிரசாந்த் ஆகியோா் கட்சியிலிருந்து விலகினா். அனில்குமாா் ஆளும் மாா்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.