விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஹிந்து ராஷ்டிரம் என அறிவியுங்கள், இல்லையெனில் ஜல சமாதிதான்: உ.பி. துறவி சர்ச்சை

அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என மத்திய அரசு அறிவிக்காவிட்டால், ஜல சமாதி ஆகிவிடுவேன் என ஜெகத்குரு பரமஹம்ச ஆச்சார்ய மகாராஜ் வலியுறுத்தியுள்ளார்.

News image
Updated On :29 செப்டம்பர் 2021, 1:25 pm

DIN


அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என மத்திய அரசு அறிவிக்காவிட்டால், ஜல சமாதி ஆகிவிடுவேன் என ஜெகத்குரு பரமஹம்ச ஆச்சார்ய மகாராஜ் வலியுறுத்தியுள்ளார்.

இதுபற்றி உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் அவர் கூறியதாவது:

"அக்டோபர் 2-க்குள் இந்தியாவை ஹிந்து ராஷ்டிரம் என அறிவிக்க வேண்டும். அதை நிறைவேற்றாவிட்டால் சரயு நதியில் ஜல சமாதி ஆகிவிடுவேன். இந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்துவர்களின் தேசிய உரிமையை மத்திய அரசு முடிவுக்குக் கொண்டுவர வேண்டும்."

அயோத்தி துறவிகள் சமூகத்தினர் இதுபற்றி கூறுகையில், "ஆச்சார்ய மகாராஜ் கோரிக்கையை ஆதரித்து ஹிந்து சனாதன தர்ம மாநாட்டை நாங்கள் நடத்துவோம்" என்றனர்.

இவர் ஏற்கெனவே இந்த விவகாரம் தொடர்பாக 15 நாள்களுக்கு சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார். பின்னர் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த உத்தரவாதத்துக்குப் பிறகு உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

உத்தரப் பிரதேசத்தில் அடுத்தாண்டு வரவிருக்கும் சட்டப் பேரவைத் தேர்தலுக்கு அனைவரும் தயாராகி வரும் நிலையில், இவரது கருத்து தற்போது பேசுபொருளாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.