திரிணமூலில் இணைந்த கோவா முன்னாள் முதல்வர் லூயிசினோ ஃபெலேரோ
கோவா முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ அக்கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.


கோவா முன்னாள் முதல்வரும், அந்த மாநில காங்கிரஸ் மூத்த தலைவருமான லூயிசினோ ஃபெலேரோ அக்கட்சியில் இருந்து விலகி திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இன்று இணைந்தார்.
காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகுவதாக நேற்று அறிவித்த லூயிசினோ, மேற்குவங்க மாநில முதல்வரும், திரிணமூல் தலைவருமான மம்தா பானர்ஜியை கொல்கத்தாவில் சந்தித்து அக்கட்சியில் இணைந்தார்.
ஃபெலேரோவின் விலகலால் கோவாவில் பேரவையில் காங்கிரஸின் பலம் 4-ஆகக் குறைந்துவிட்டது. 2017 கோவா பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் 17 இடங்களில் வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடா்ந்து அக்கட்சியில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனா். இதில் 2019-இல் மட்டும் 10 எம்எல்ஏக்கள் மொத்தமாக விலகி பாஜகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...