மீரட்டில் அதிகரிக்கும் டெங்கு; புதிதாக 33 பேர் பாதிப்பு

மீரட்டில் புதிதாக ஒரேநாளில்33 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தலைமை சுகாதார அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

மீரட்டில் புதிதாக ஒரேநாளில்33 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக  தலைமை சுகாதார அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். 

உத்தரப்பிரதேச மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு மற்றும் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கரோனா வைரஸ் தொற்றுக்கு இடையே இங்கு டெங்கு பாதிப்பும் அதிகரித்து வருவது மாநில அரசுக்கு பல்வேறு சவால்களை ஏற்படுத்தியுள்ளது. 

இந்நிலையில், மீரட் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 33 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 

தலைமை மருத்துவ அதிகாரி அகிலேஷ் மோகன் இதுகுறித்து, புதிதாக 33 பேர் உள்பட இதுவரை 70 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளதால் வீட்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொற்றுநோயைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையால் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மக்களிடையே டெங்கு பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com