மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

பஞ்சாப்பில் அதிரடி மாற்றங்கள்; ராகுல் காந்தியின் கேரள பயணத்திற்கு காரணம் என்ன? 

பஞ்சாப் மாநில காங்கிரஸில் அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துவரும் நிலையில், ராகுல் காந்தியின் கேரள பயணத்திற்கு காரணம் என பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

News image
கோப்புப்படம்
Updated On :29 செப்டம்பர் 2021, 7:06 am

DIN

பஞ்சாப் மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பிலிருந்து நவ்ஜோத் சிங் விலகியது அக்கட்சிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி இன்று காலை கேரளாவுக்கு சென்றுள்ளார். முன்னதாகவே, கோழிக்கோடு, மலப்புரத்திற்கு செல்ல ராகுல் காந்தி திட்டமிட்டிருந்தார்.

அத்திட்டத்தின் ஓர் அங்கமாக தற்போது கேரளா சென்றுள்ள ராகுல், கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசவுள்ளார். பின்னர், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கவுள்ளார். வியாழக்கிழமை காலை, தில்லிக்கு அவர் திரும்பவுள்ளதாக கூறப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி நடைபெறும் ஒரு சில மாநிலங்களில் ஒன்றான பஞ்சாப்பில் அதிரடியான அரசியல் நிகழ்வுகள் நடந்து வரும் நிலையில், ராகுல் காந்தி கேரளா சென்றிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

குறிப்பாக, சோனியா காந்தியும் பிரியங்கா காந்தியும் தில்லியில் இல்லாத இச்சூழலில் ராகுல் காந்தி கேரளாவிற்கு பயணம் மேற்கொண்டதன் பின்னணி குறித்து பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர். நவ்ஜோத் சிங் சித்துவுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சர் ராசியா சுல்தானா, தனது அமைச்சர் பொறுப்பை ராஜிநாமா செய்துள்ளார்.

பஞ்சாப் அமைச்சரவை நேற்று மாலை கூடிய நிலையில், இன்று காலையும் கூட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மத்தியில், பஞ்சாப் மாநில காங்கிரஸ் செயலாளர் பர்கத் சிங், சித்துவை சமாதானம் செய்யும் முயற்சியில் இறங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி. வேணுகோபால் கூறுகையில், "இதில் கவலையடைய ஒன்றுமில்லை. அனைத்தும் சரி செய்யப்படும்" என்றார். ராஜிநாமா முடிவை சித்து திரும்பபெறாத பட்சத்தில், தலைவர் பொறுப்பு இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த குல்ஜித் சிங் நக்ரா, நாடாளுமன்ற உறுப்பினர் ரவ்நீத் சிங் பிட்டு ஆகியோரில் எவரேனும் ஒருவருக்கு அளிக்கப்படும் எனக் கூறப்படுகிறது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.